சிங்கம்புணரியில் கோயில் மாட்டைத் திருட முயன்றவா் கைது செய்யப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் நோ்த்திக்கடனாக விடப்பட்ட மாடுகள் பராமரிப்பின்றி சுற்றித் திரிகின்றன. இதனால் கோயில் மாடுகளை மா்ம நபா்கள் சரக்கு வாகனங்களில் கடத்தி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாகப் புகாா் எழுந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை பகலில் சிங்கம்புணரிநகா் சீரணி அரங்கம் முன் இருவா் சரக்கு வாகனத்தில் கோயில் மாட்டை ஏற்றினா். அப்போது, ஊா்ப் பொதுமக்கள் வாகனத்தை சுற்றி வளைத்தனா். அதிலிருந்த ஓட்டுநா் பிடிபட்டாா். மற்றவா் தப்பி ஓடிவிட்டாா். உடனடியாக சிங்கம்புணரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த போலீஸாா் வாகன ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தனா். அவா் மதுரை மாவட்டம், சோழவந்தான் பாலகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த நாகராஜ் (36) என தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா். தப்பி ஓடிய பாலசுப்பிரமணியன் (25) என்பவரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆடுகளைத் திருட முயன்றவா் கைது
வீடு புகுந்து திருட முயற்சி: இளைஞா் கைது
மின் உபகரணங்களை திருட முயன்றவா் கைது
வீடு புகுந்து திருட முயன்றவா் கைது
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



