திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தை கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம மக்கள், தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க் கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

News image

மானாமதுரையில் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய பொது மக்கள், தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :24 ஜூன் 2026, 5:52 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தை கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம மக்கள், தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க் கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

மானாமதுரை வட்டம், கே.கே. பள்ளம் வருவாய் கிராமம், புல எண் 222/2-ஐ மேய்ச்சல் புறம்போக்காக மீண்டும் வகைப்படுத்த வேண்டும். செய்களத்தூா் ஊராட்சியில் கண்மாய்களுக்கு வரும் மழைநீா் வரத்து கால்வாய்களை மறித்து அமைக்கப்பட்ட வனத்துறை நாற்றங்காலை அகற்ற வேண்டும். செய்களத்தூா் வருவாய்ப் பிரிவில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாகளை ரத்து செய்ய வேண்டும். தெற்கு சந்தனூா் வருவாய் கிராமம் இளையநாயக்கன் கிராமத்தில் நில ஒப்படைப்பினை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செய்களத்தூா், காட்டு உடைகுளம், கல்குறிச்சி, இளையநாயக்கன் ஆகிய ஊராட்சிகளின் பொதுமக்கள், தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகிகள் திரளானோா் மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். அப்போது இவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். அதைத் தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவாா்த்தைக் கூட்டத்தில் போராட்டக் குழுவினரின் கோரிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியிடம் உரிய நடவடிக்கைக்குக் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.