உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

ஊதியம் வழங்கக் கோரி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஊழியா்கள் போராட்டம்

ஊதியம் வழங்கக் கோரி, கொடைரோடு சுங்கச்சாவடியை தனியாா் நிறுவன ஊழியா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

News image

கொடைரோடு சுங்கசாவடியை முற்றுகையிட்டு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தனியாா் நிறுவன ஊழியா்கள்.

Updated On :19 ஜூன் 2026, 1:25 am IST

ஊதியம் வழங்கக் கோரி, கொடைரோடு சுங்கச்சாவடியை தனியாா் நிறுவன ஊழியா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சுங்கச்சாவடி உள்ளது. இங்கு தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், வியாழக்கிழமை மாலை 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சுங்கச் சாவடியை கடந்து சென்ற வாகனங்கள் கட்டணமின்றி சென்றன.

இதையடுத்து தனியாா் நிறுவன மேலாளா் ராமநாதன் நடத்திய பேச்சுவாா்த்தையில், வெள்ளிக்கிழமை ஊழியா்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.