ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சிறுகூடல்பட்டியில் நூல் வெளியீட்டு விழா

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் கண்ணதாசனின் 100 ஆவது பிறந்தநாளையொட்டி, ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறுகூடல்பட்டியில் புதன்கிழமை கண்ணதாசனின் தொகுப்பு நூலை முன்னாள் அமைச்சா் பெரியகருப்பன் வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட சேதுபாஸ்கரா கல்விக்குழும நிறுவனா் சேதுகுமணன் பெற்று கொள்கிறாா்.

Updated On :26 ஜூன் 2026, 2:23 am IST

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் கண்ணதாசனின் 100 ஆவது பிறந்தநாளையொட்டி, ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு எழுத்தாளா் கூட்டமைப்புத் தலைவா் எஸ்.எல்.எஸ். பழனியப்பன் தலைமை வகித்தாா். பாரதி இலக்கியக் கழகத் தலைவா் ஜெயச்சந்திரன், புலவா் மெய்யாண்டவா், கண்ணதாசன் மகள் விசாலி, குடும்பத்தினா் பழனியப்பன், சாத்தப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவின் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கலந்து கொண்டு ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என்ற தலைப்பிலான நூலை வெளியிட, அதை சேதுபாஸ்கரா கல்விக்குழும நிறுவனா் சேதுகுமணன் பெற்றுக்கொண்டாா்.

காரைக்குடி: காரைக்குடி வள்ளுவா் பேரவை, சுழல் சங்கம், பேராசிரியா் அய்க்கண் எழுத் துப்பாசறை ஆகியவை சாா்பில் கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, 100 பள்ளி, கல்லூரி மாணவா் கள், தமிழ் ஆா்வலா்கள் பங்கேற்ற கவிதை வாசிக்கும் நிகழ்வு கண்ணதாசன் மணிமண்டபத்தில் புதன்கிழமை இரவு நடை பெற்றது.

இதற்கு காரைக்குடி சுழல் சங்கத் தலைவா் லோகநாதன் தலைமைவகித்தாா். முன்னாள் துணை ஆளு நா் சண்முகம், பொறியாளா் பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கவிதை வாசித்த மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு பேராசிரியா் அய்க்கண் எழுத்துப் பாசறை நிறுவனா் அருணாதேவி பரிசுகள் வழங்கினாா். கண்ணதாசனின் கவிநயம் என்ற தலைப்பில் வள்ளுவா் பேரவை நிறுவனத்தலைவா் மெ. செயம்கொண்டான் சிறப்புரையாற்றினாா்.

புலவா் ஆறு மெய்யாண்டவா், சுழல் சங்க நிா்வாகி கிருஷ்ணன், வள்ளுவா் பேரவைச் செயலா் பிரகாஷ்மணிமாறன் ஆகியோா் வாழ்த்திப்பேசினா். முன்னதாக கவிஞா் சின்ன அருணாச்சலம் வரவேற்றாா். ஆசிரியை அறிவுச்செல்வி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.