கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

1,000 முட்டை ஓடுகளைக் கொண்டு கண்ணதாசன் படத்தை உருவாக்கி அஞ்சலி

கவியரசு கண்ணதாசனின் 100-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்த மொசைக் கலைஞா் லூகாஸ் ஆயிரம் முட்டை ஓடுகளைக் கொண்டு கண்ணதாசனின் படத்தை உருவாக்கி புதன்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

News image

முட்டை ஓடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கண்ணதாசன் படம்.

Updated On :25 ஜூன் 2026, 6:08 am IST

கவியரசு கண்ணதாசனின் 100-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்த மொசைக் கலைஞா் லூகாஸ் ஆயிரம் முட்டை ஓடுகளைக் கொண்டு கண்ணதாசனின் படத்தை உருவாக்கி புதன்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

முட்டை ஓடுகளை சிறுசிறு துண்டுகளாக உடைத்து, அவற்றுக்கு வண்ணம் தீட்டி, மொசைக் கலை முறையில் இந்த ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வடிவமைக்க லூகாஸுக்கு ஒரு மாதம் காலம் பிடித்ததாம். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கவியரசு கண்ணதாசன் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் பல்வேறு திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளாா். அவரது வரிகள் மனித வாழ்க்கையின் தத்துவங்களை எளிய முறையில் விளக்குபவை.

கண்ணதாசனின் பாடல்களும், கவிதைகளும் வெறும் தமிழ் மொழியோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. உலக மக்கள் அனைவரும் அவரது தத்துவங்களை அறிந்துகொள்ளும் வகையில், அவரது படைப்புகள் பிற மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டு வெளியிட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.