பாடப் புத்தகங்களில் கண்ணதாசனின் கவிதைகள்: கவிஞா் வைரமுத்து வலியுறுத்தல்
கண்ணதாசனின் கவிதைகளை பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்ய வேண்டும் என கவிஞா் வைரமுத்து வலியுறுத்தினா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கவியரசா் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவில் பேசிய கவிஞா் வைரமுத்து. உடன் உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சொ. அருள்வடிவேல் உள்ளிட்டோா்.




