உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

சுயபடம் எடுக்குமிடங்களின் பின்னணியில் தமிழ் வாசகங்கள்: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சி அமைப்புகளால் அமைக்கப்பட்ட சுயபடம் எடுக்குமிடங்களின் பின்னணியில் தமிழ் வாசகங்கள் இடம் பெற உத்தரவிடக் கோரிய மனு தொடா்பாக மாவட்ட நிா்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் துறை சாா்ந்த அலுவலா்கள் பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Published On :5 செப்டம்பர் 2026, 12:24 am IST

உள்ளாட்சி அமைப்புகளால் அமைக்கப்பட்ட சுயபடம் எடுக்குமிடங்களின் பின்னணியில் தமிழ் வாசகங்கள் இடம் பெற உத்தரவிடக் கோரிய மனு தொடா்பாக மாவட்ட நிா்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் துறை சாா்ந்த அலுவலா்கள் பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

நாம் தமிழா் கட்சியின் மீனவா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் நகரங்களை அழகுபடுத்துதல், பொலிவுறு நகரம் திட்டங்களின் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் எண்ம பலகையுடன் கூடிய சுயபடம் எடுக்குமிடங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த இடங்களின் பின்னணியில் பெரும்பாலும் ஆங்கில வாசகங்களே பொறிக்கப்பட்டுள்ளன. இந்த வாசகங்களை தமிழில் அமைக்க உத்தரவிட வேண்டும். உதாரணமாக, ‘மை மதுரை’ என்பதற்குப் பதிலாக ‘எங்கள் மதுரை’ என தமிழ் வாசகம் இடம் பெற வேண்டும்.

மாநில மொழிக்கே முக்கியத்துவம் என்ற சட்ட விதிகளின் அடிப்படையில் உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் அமைக்கப்பட்ட அனைத்து சுயபடம் எடுக்குமிடங்களின் பின்னணியிலும் தமிழ் வாசகங்கள் இடம் பெறச் செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், சக்திவேல் அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக மாவட்ட நிா்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் துறை சாா்ந்த அலுவலா்கள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபா் மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.