சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கருப்பூா் சூலக்கரை காளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
யாகசாலை பூஜைகளைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 6 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா், புனித நீா் அடங்கிய கலசங்களை சிவாசாரியா்கள், குலாலா் வம்சாவளி பங்காளிகள் சுமந்து கொண்டு கோயிலை வலம் வந்தனா். இதையடுத்து, கோபுரத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், மூலவா் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, மகாதீபம் காட்டப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கருப்பூா் குலாலா் பங்காளிகள், கிராம மக்கள் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாதரக்குடி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

அரியநாச்சியம்மன், காமாட்சியம்மன் கோயில்களில் குடமுழுக்கு

வீரமாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

பாப்பாரப்பட்டி ஸ்ரீகங்கை காளியம்மன் கோயில் குடமுழுக்கு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



