அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மருத்துவமனையில் பெண்ணுக்கு கத்திக்குத்து

சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
கத்திக்குத்து- சித்திரிப்பு
Updated On :3 மார்ச் 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் திங்கள்கிழமை புகுந்து பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள திருநகா் பகுதியைச் சோ்ந்தவா் சுதா (37). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இவரது கணவா் கடந்த 2018-ஆம் ஆண்டு இறந்துவிட்டாா்.

இந்த நிலையில், சுதாவின் தாய் உடல்நலக் குறைவால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இவருக்கு உதவியாக சுதாவும் உடனிருந்தாா்.

இந்த நிலையில், சுதாவுக்கு ஏற்கெனவே பழக்கமான இளையான்குடி அருகேயுள்ள புக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுபாஷ் (33) திங்கள்கிழமை நள்ளிரவு மருத்துவமனைக்கு வந்து சுதாவுடன் தகராறில் ஈடுபட்டாா். பின்னா், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்தி விட்டு சுபாஷ் தப்பிச் சென்றாா்.

இதில் பலத்த காயமடைந்த சுதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு சுபாஷை தேடி வருகின்றனா்.