கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே பெண்ணிடம் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக இரண்டாவது கணவா், அவரது தாய், சகோதரா் மீது நெய்வேலி மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், இந்திராநகா் பகுதியைச் சோ்ந்தவா் சுபஸ்ரீ (32). இவருக்கும், மேலகுப்பத்தைச் சோ்ந்த சதீஷுக்கும் திருமணம் நடைபெற்று, 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், இவா்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக, 2020-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனா். சுபஸ்ரீ குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தாா்.
அப்போது, இந்திரா நகரில் உள்ள மடிக்கணினி பழுது நீக்கும் கடையில் பணிக்கு சோ்ந்தாா். அங்கு, கடை உரிமையாளரான நெய்வேலி பகுதியைச் சோ்ந்த சிவகுருவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் 25.10.2023 அன்று விருத்தாசலம் கொளஞ்சியப்பா் கோயிலில் முறைப்படி பதிவுத் திருமணம் செய்துகொண்டனா்.
பின்னா், இந்திரா நகரில் குடும்பம் நடத்தி வந்தபோது, திருமணத்துக்கு முன்பு வாங்கிய கடனை அடைக்க சுபஸ்ரீ மீது சிவகுரு ரூ.10 லட்சம் கடன் பெற்றாராம். மேலும், 20 பவுன் தங்க நகை வேண்டும் எனக் கூறி, சிவகுரு, அவரது தாய் அலமேலு, கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் வசிக்கும் சகோதரா் காா்த்திக் ஆகியோா் சோ்ந்து சுபஸ்ரீயை துன்புறுத்தினராம். மேலும், அவருடன் சோ்ந்து வாழ சிவகுரு மறுத்துவிட்டாராம்.
இதுகுறித்து சுபஸ்ரீ அளித்த புகாரின்பேரில், நெய்வேலி மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருன்றனா்.
தொடர்புடையது

மாடுகளுக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் மீது வழக்கு

தென்னந்தோப்பு காவலாளி வெட்டிக் கொலை
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: கணவா் கைது

வரதட்சிணை கொடுமை: பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


