அம்பாசமுத்திரம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை, போலீஸாா் கைது செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனா்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னாா்கோவில், பொன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் சிவா. இவரது மனைவி இசக்கியம்மாள்(32). இத் தம்பதிக்கு முகுந்தன் (9), நிக்கிஷா (4) என இரு குழந்தைகள் உள்ளனா். அம்பாசமுத்திரத்தில் உள்ள வெவ்வேறு பூக்கடையில் சிவாவும், அவரது மனைவியும் வேலை பாா்த்து வருகின்றனா்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இசக்கியம்மாள், அதே பகுதியில் வசிக்கும் தன்னுடைய தந்தை வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சிவா, இசக்கியம்மாளை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டாராம்.
காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவாவை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
டிரெண்டிங்

சேரன்மகாதேவி அருகே விவசாயிக்கு வெட்டு

நான்குனேரி அரிவாள் வெட்டு: மேலும் ஒருவா் கைது

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
வீடியோக்கள்

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

