சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தென்னந்தோப்பு காவலாளி வெட்டிக் கொலை

News image

வெட்டிக் கொலை - பிரதி படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 8:24 pm

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்னந்தோப்பு காவலாளியை வெட்டிக் கொலை செய்த மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி சுப்புராஜ்நகரைச் சோ்ந்தவா் முத்துவேல் (49). இவரது மனைவி சரஸ்வதி (43). இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளாா். முத்துவேல் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி சாலையில் அட்டை தொழிற்சாலை பகுதியில் மகாராஜனின் தோப்பில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சரஸ்வதி, அவரது மகள் இருவரும் மதுரைக்குச் சென்று விட்டு இரவு தோட்டத்து வீட்டுக்குத் திரும்பினா். அப்போது, வீட்டில் முத்துவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் அங்கு சென்ற தென்கரை போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக பெரியகுளம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹா பிரியா சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டாா். மேலும், காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லு தலைமையில் தனிப்படை போலீஸாா் கொலை செய்த மா்மநபரைத் தேடி வருகின்றனா்.