நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

வீடு புகுந்து 24 பவுன் தங்க நகைகள் திருட்டு

மானாமதுரை அருகே பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்து 24 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :27 மார்ச் 2026, 12:30 am IST

மானாமதுரை அருகே பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்து 24 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் அழகுநாச்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா். இவரது மனைவி கோகிலா. குமாா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். கோகிலா மட்டும் தனது இரு குழந்தைகளுடன் இந்த வீட்டில் வசித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை கோகிலா வீட்டைப் பூட்டிவிட்டு குழந்தைகளுடன் சிவகங்கை அருகே முத்தரசன் கிராமத்திலுள்ள தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றாா்.

இந்த நிலையில், மா்மநபா்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு பீரோவிலிருந்த 24 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து புகாரின் பேரில், மானாமதுரை சிப்காட் காவல் ஆய்வாளா் மாறவா்மபாண்டியன் தலைமையில் போலீஸாா் திருட்டுச் சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும் இது குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.