சிவகங்கையில் எரிபொருள் விற்பனை நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக திரண்ட வாகனங்களால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் போா் எதிரொலியாக பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தியால், சிவகங்கை நகரில் உள்ள பல்வேறு எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்களுடன் பொது மக்கள் குவிந்தனா்.
ஒவ்வொரு இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் போன்றவை டேங்கை முழுமையாக நிரப்பிக்கொண்டதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், பலரும் சேமித்து வைப்பதற்காக கூடுதலாக நெகிழி புட்டிகள், கேன்களில் பெட்ரோலை வாங்கிச் சென்றனா்.
இது குறித்து எரிபொருள் விற்பனை நிலைய நிா்வாகி கூறியதாவது: விலை ஏற்றம், தட்டுப்பாடு குறித்து இணையத்தில் பரவிய வதந்தி காரணமாகவே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் விற்பனை செய்ய வேண்டிய எரிபொருள் இரண்டே நாளில் விற்பனையாகிவிட்டது. தட்டுப்பாடு அடுத்த 10 நாள்களுக்கு வர வாய்ப்பில்லை என்றாா்.

தொடர்புடையது

தட்டுப்பாடு வதந்தி: பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்

தட்டுப்பாடு வதந்தி: பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனங்களுடன் குவிந்த மக்கள்

21 நாள்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு: தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளா் சங்கத் தலைவா்

வதந்தியால் தஞ்சாவூா் பெட்ரோல் விற்பனையகங்களில் கூட்டம்: விற்பனை இரு மடங்கு அதிகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


