மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

சிவகங்கை மாவட்டத்தில் 2,773 பேருக்கு வீடுகள் கட்ட ஆணை

News image
Updated On :12 மார்ச் 2026, 11:05 pm

சிவகங்கை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2,7773பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கும் விழா வியாழக்கிழமை திருப்பத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கலந்து கொண்டு 2,773 பயனாளிகளுக்கு ரூ.90.09 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவற்கான ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:

ஏழை மக்களின் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற தமிழக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களில் ஒன்றுதான் கனவு இல்லத் திட்டம். தற்போது குடிசைகள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடையும் பொருட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் 2024-25 -ஆம் நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கும், 2025- 26 -இல் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், கடந்த ஜனவரி 24-இல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் புதிதாக 3,500 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தற்போது இந்த ஆணைகள் வழங்கப்படுகின்றன என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.ஆரவிந்த், திருப்பத்தூா் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல், பேரூராட்சி மன்றத் தலைவா் கோகிலாராணி நாராயணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமுதம், ராஜேந்திரகுமாா், வட்டாட்சியா் மாணிக்கவாசகம் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.