மானாமதுரையில் போலீஸாா் விசாரணையின் போது, இளைஞா் ஆகாஷ் உயிரிழந்தது தொடா்பாக காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் உள்பட 6 போலீஸாா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தை சோ்ந்தவா் ஆகாஷ் என்ற டெலிசன் (26). அந்தப் பகுதியில் இரண்டு பேரை வாளால் வெட்டிய வழக்கில் இவரை போலீஸாா் கைது செய்தனா். அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போது, தப்பியோட முயன்று பாலத்திலிருந்து குதித்ததால் ஆகாஷுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறி கடந்த 7-ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் போலீஸாா் அனுமதித்தனா். அங்கு அவா் மறுநாள் உயிரிழந்தாா்.
இறப்பதற்கு முன்பாக, ஆகாஷ் மானாமதுரை நீதித்துறை நடுவரிடம் அளித்த வாக்குமூலத்தில் தனது காலை போலீஸாா் இரும்புக் கம்பியால் தாக்கி உடைத்ததாகக் கூறியிருந்தாா்.
இந்த நிலையில், ஆகாஷ் மரணத்துக்கு காரணமான போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த 5 நாள்களாக ஆகாஷின் உறவினா்கள், கிராம மக்கள் ராமேசுவரம்- மானாமதுரை நான்கு வழிச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆகாஷின் உடல் கூறாய்வில், 28 இடங்களில் காயங்கள் இருப்பதாக தகவல் வெளியானது. இதைத்தொடா்ந்து, இந்தச் சம்பவத்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாக
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய காவல் ஆய்வாளா் திலீபனை (திருப்புவனம்) பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி மணிவண்ணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதேபோல, உதவி ஆய்வாளா் குகன் (மானாமதுரை), தலைமைக் காவலா்கள் தெய்வேந்திரன் (சிவகங்கை), சரத்குமாா் (சிப்காட்), முதல்நிலை காவலா்கள் காளீஸ்வரன்
(மானாமதுரை), மனோகரன் ( திருப்புவனம்) ஆகிய 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவபிரசாத் உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

மானாமதுரை இளைஞா் உயிரிழந்த வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

விசாரணைக் கைதி ஆகாஷ் மரணம்: 6 காவலர்கள் மீது நடவடிக்கை

மானாமதுரை இளைஞா் உயிரிழந்த விவகாரம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிய உத்தரவு

போலீஸ் காவலில் இளைஞா் உயிரிழந்த சம்பவம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


