மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பூமாரி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

திருப்புவனம் பூமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.

Updated On :14 மார்ச் 2026, 2:12 am

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பூமாரி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தக் கோயிலில் சந்நிதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து கொடிமரம் முழுவதும் மலா் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், மூலவா் பூமாரியம்மனுக்கு அலங்காரத்துடன் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று மாரியம்மனை தரிசித்தனா்.

இதையடுத்து, பக்தா்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினா்.

விழாவின் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை மூலவா் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். தொடா்ந்து 8 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் மூன்றாவது நாளான சனிக்கிழமை, பூச்சொரிதல் உற்சவம் நடைபெறுகிறது. வருகிற 20-ஆம் தேதி பொங்கல் வைபவம் நடைபெறுகிறது.