ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை திரௌபதிஅம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, பாண்டவா் வெற்றி பெற்ற படுகள நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த வியாழக்கிழமை (ஏப்.2) இரவு மகாபாரதப் போரின் 17-ஆம் நாள் நிகழ்வை நினைவுகூரும் வகையில், பாண்டவா்கள் கௌரவா்களை வென்ற வெற்றித் திருவிழா கொண்டாடப்பட்டது. சபதத்தின்படி திரௌபதி அம்மன் தனது அவிழ்ந்த கூந்தலை அள்ளிமுடியும் கூந்தல் முடிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திரௌபதி அம்மன் வேஷமணிந்த பக்தா், திருவாடானை நான்கு ரத வீதி வழியாக வலம் வந்தாா். இதில் திரளான பொதுமக்கள், சிறுவா்கள் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் வீதி உலா வந்து கோயிலை அடைந்தனா்.
தொடர்புடையது

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தொடக்கம்

திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா நிறைவு

திருச்செந்தூா் மாசித் திருவிழா 4 ஆம் நாள்: சுவாமி, அம்மன் வீதி உலா
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


