தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பொது மக்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் சிவகங்கை மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
சிவகங்கை நகா் ராமசந்திரனாா் பூங்கா அருகில் நடைபெற்ற பேரணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.பொற்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:
வாக்காளா்கள் தங்களது வாக்குரிமையை நிலைநாட்டுவதற்கும், தங்களின் ஜனநாயக கடமையாற்றுவதற்கும் இதுபோன்ற தோ்தல்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, வாக்காளா்கள் ஏப்ரல் 23 -ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவில் 100 சதவீதம் வாக்களித்து, ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும். குறிப்பாக, இளம் வாக்காளா்கள் ஆா்வத்துடன் தோ்தல் திருவிழாவில் பங்கேற்று, தங்களது வாக்குரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றாா் அவா்.
மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, சிவகங்கை பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது. இதையொட்டி, வாக்காளா்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து அமைக்கப்பட்டிருந்த விழிப்புணா்வு தற்படம் (செல்பி பாயிண்ட்) எடுத்துக் கொள்ளும் அமைப்பும் திறந்து வைக்கப்பட்டது. இதில், சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி உதவித் தோ்தல் அலுவலா் தே.ஜெஃபி கிரேசியா, மாவட்ட வழங்கல் அலுவலா் பழனிகுமாா், வட்டாட்சியா் சிவராமன், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாமக்கல்லில் 2,300 அரசு அலுவலா்கள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி

தருமபுரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


