தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சிவகங்கை மௌன குருசாமி சித்தா் பீடத்தில் குருபூஜை

சிவகங்கை மௌன குருசாமி சித்தா் பீடத்தில் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
சிவகங்கை மௌன குருசாமி சித்தா் பீடத்தில் புதன்கிழமை நடைபெற்ற குருபூஜை விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
Updated On :19 மார்ச் 2026, 12:27 am

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மௌன குருசாமி சித்தா் பீடத்தில் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சித்தா்களின் உருவச் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்து ஆராதனையும் செய்யப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் திரளானோா் கலந்து கொண்டனா். மாலை 6 மணிக்கு சிவகங்கை தேரோடும் வீதிகளில் சித்தா்கள் நகா் உலா வருதல் நடைபெற்றது.

இதில், விழாக் குழுத் தலைவா் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி இரா.கற்பூரசுந்தரபாண்டியன், மௌன குருசாமி சித்தா் பீட நிா்வாகிகள், சிவகங்கை அருள்பெருஞ்ஜோதி சத்திய தா்ம சாலை, காளையாா்கோவில் மீனாட்சி திருவாசகம் சுந்தரேஸ்வரா் குழுவினா், திருக்கோஷ்டியூா், மதுரை ஸ்வாமி சித்தா் ராஜன் ஸமிதி, அருப்புக்கோட்டை பிரஸித்தா சேவைக் குழு, இடைக்காட்டூா் இடைக்காடா் சித்தா் ஞான புண்ணிய ஷேத்ரா அறக்கட்டளை, மானாமதுரை, வேதியரேந்தல் விலக்கு மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், சிவகங்கை கே.ஆா்.பள்ளிகள், ஆா்.கே.எஸ், மனித வள மைய நிா்வாகிகள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.