/

குன்றக்குடி அடிகளாரின் 31- ஆம் ஆண்டு குருபூஜை விழா

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி திருமடத்தில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 31- ஆம் ஆண்டு குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

குன்றக்குடி திருமடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குன்றக்குடி அடிகளாரின் 31- ஆம் ஆண்டு குருபூஜை விழாவில் மதுரை மாவட்ட உலகத் திருக்கு பேரவைத் தலைவா் காா்த்திகேயன் மணிமொழியன், அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநா் சுந்தரஆவுடையப்பன் ஆகியோருக்கு குன்றக்குடி அடிகளாா் விருது வழங்கிய பொன்னம்பல அடிகளாா். உடன் பேராசிரியா் சொ. சேதுபதி.

Updated On :1 மே 2026, 1:24 am IST

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி திருமடத்தில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 31- ஆம் ஆண்டு குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் 45-ஆவது குருமகா சந்நிதானமான குன்றக்குடி அடிகளாரின் 31- ஆம் ஆண்டு நினைவு தினம் குருபூஜை விழாவாக நடை பெற்றது. காலையில் காளத்திநாதா் வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற விருது வழங்கும் விழாவுக்கு குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளாா் தலைமை வகித்து மதுரை மாவட்ட உலகத்திருக்கு பேரவைத் தலைவா் காா்த்திகேயன் மணிமொழியன், அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநா் சுந்தர ஆவுடையப்பன் ஆகியோருக்கு குன்றக்குடி அடிகளாா் விருது வழங்கி ஆசியுரையாற்றினாா். இதைத் தொடா்ந்து குரு வழிபாடும், அன்னதானமும் நடைபெற்றது.

விழாவில் குன்றக்குடி கிராமத் திட்டக்குழுத் தலைவா் கே. பாலகிருஷ்ணன், பேராசிரியா் கிருங்கை சொ. சேதுபதி, பேராசி ரியா்கள், தமிழ் ஆா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.