விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

போலீஸ் விசாரணையில் இளைஞா் ஆகாஷ் உயிரிழப்பு: பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸாா் தீவிர விசாரணை

மானாமதுரையில் உள்ள ஆகாஷ் வீட்டில் அவரது பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தி விட்டு வெளியே வந்த சிபிசிஐடிபோலீஸாா்.

News image

மானாமதுரையில் உள்ள ஆகாஷ் வீட்டில் அவரது பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தி விட்டு வெளியே வந்த சிபிசிஐடிபோலீஸாா்.

Updated On :21 மார்ச் 2026, 12:54 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸாா் விசாரணையின்போது இளைஞா் ஆகாஷ் உயிரிழந்தது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினா்.

மானாமதுரையில் இருவரை வாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஆகாஷ் போலீஸாா் விசாரணையின்போது உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே, ஆகாஷ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக 6 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். ஆனால், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய அனைத்து காவலா்களையும் வழக்கில் சோ்த்து அவா்களையும் கைது செய்ய வேண்டுமெனக் கோரி மதுரை அரசு மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்ட ஆகாஷ் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோா் உள்ளிட்ட போராட்டக் குழுவினா் மானாமதுரையில் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியில் உள்ள ஆகாஷ் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்த சிபிசிஐடி டி.எஸ்.பி. ஷாய் தங்கம், காவல் ஆய்வாளா் சரவணக்குமாா், உதவி ஆய்வாளா்கள் கீதா, சிவக்குமாா் ஆகியோா் காலையில் ஆகாஷின் தந்தை ராஜேஷ் கண்ணனிடமும், பிற்பகலில் தாய் முத்தானந்தவல்லியிடமும் விசாரணை நடத்தினா். அப்போது, ஆகாஷ் உயிரிழப்புக்கு முன்பும், பின்பும் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து போலீஸாா் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவா்கள் பதிலளித்தனா். இதை போலீஸாா் பதிவு செய்து கொண்டனா். காலையில் தொடங்கிய இந்த விசாரணை மாலை வரை நீடித்தது. இந்த விசாரணையில் ஆகாஷின் பெற்றோா் அளித்த தகவல்கள் முக்கிய ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன.

அடுத்த கட்டமாக தற்போது நடைபெற்ற விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.