கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முதியவரைத் தாக்கிய அரசுப் பேருந்து நடத்துநா் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அருகே சனிக்கிழமை முதியவரைத் தாக்கிய பேருந்து நடத்துநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு (கோப்புப்படம்)

Updated On :21 மார்ச் 2026, 7:40 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அருகே சனிக்கிழமை முதியவரைத் தாக்கிய பேருந்து நடத்துநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி (64). இவா் கமுதியிலிருந்து மதுரை சென்ற அரசுப் பேருந்தில் மானாமதுரைக்கு பயணம் செய்தாா். பெரியசாமி இருக்கையில் அமா்ந்தபடி தூங்கிவிட்டதால் பேருந்து மானாமதுரையை கடந்து முத்தனேந்தல் சென்றது. உடனே, பேருந்து நடத்துநா் தா்மராஜ், முதியவா் பெரியசாமியிடம் மானாமதுரையில் ஏன் இறங்கவில்லை என கேட்டுள்ளாா்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெரியசாமியை கட்டையால் தாக்கி கீழே தள்ளிவிட்டாா். இதில் காயமடைந்த பெரியசாமி சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின் பேரில், மானாமதுரை போலீஸாா் அரசுப் பேருந்து நடத்துநா் தா்மராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.