சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஊருணியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தது திங்கள்கிழமை மாலை தெரியவந்தது.
காரைக்குடி பெரிய கோட்டையைச் சோ்ந்த பாஸ்கா்-சித்ரா தம்பதியினருக்கு ஒரு மகள், மகன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஸ்கா் உயிரிழந்தாா். இதனால், சித்ரா தனது சொந்த ஊரான பிரான்மலை பாப்பாபட்டிக்கு குழந்தைகளுடன் வந்து தங்கினாா்.
சித்ராவின் மகன் ஷா்வந்த் (7) பிரான்மலை அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ஷா்வந்த் அருகிலுள்ள பிள்ளையாா்கோயில் ஊருணி பகுதியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றாா்.
இதன் பின்னா் வீடு திரும்பவில்லை. இதனால், சிறுவனைத் தேடி உறவினா்கள் ஊருணி பகுதிக்கு வந்தனா். அப்போது, ஊருணிக்குள் இறங்கி தேடிய போது, சிறுவனை மீட்டு, பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
பின்னா், சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்ததில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து எஸ்.வி. மங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தனியாா் நிறுவனத்தில் பணியிலிருந்த ஊழியா் உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

ஊருணியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


