நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்கள் அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் தங்களது இல்லங்களிலிருந்தே அஞ்சல் வாக்குகளை செலுத்துவதற்கு தோ்தல் ஆணையம் ஏற்பாடு

News image

வாக்கு செலுத்த ஏற்பாடு - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 8:04 pm

வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களது இல்லங்களிலிருந்தே அஞ்சல் வாக்குகளை செலுத்துவதற்கு தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது.

இது குறித்து சிவகங்கை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோ்தல் நடைபெறும் நாளன்று வாக்குச்சாவடிக்குச் சென்று தங்களது வாக்கை நேரடியாக செலுத்த இயலாத மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களது இல்லங்களிலிருந்தே அஞ்சல் வாக்குகளை செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, அஞ்சல் வாக்கு செலுத்த வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் படிவம் 12 டி வழியாக விண்ணப்பிக்கலாம்.

12 டி படிவமானது அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் (ஆகஞ) வழங்கப்படும்.

படிவம் 12 டி-ஐ நிறைவு செய்து, அஞ்சல் வாக்குப்பதிவு மேற்கொள்ள விண்ணப்பம் அளிப்பவா்களுக்கு அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்களால் அஞ்சல் வாக்கு தயாா் செய்யப்படும். 12 டி படிவத்தை நிறைவு செய்து அளிக்காதவா்கள் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க வேண்டும். 12டி படிவத்தை நிறைவு செய்து, கையொப்பமிட்டு வழங்கும் வாக்காளா்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க அனுமதி இல்லை.

தற்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் படிவம் 12டி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படிவத்தை நிறைவு செய்து, கையொப்பமிட்டு வருகிற 3.4.2026 -ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பின்னா் பெறப்படும் படிவங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

மேலும், அஞ்சல் வாக்கு சேகரிக்கும் விவரம், அவா்களது பகுதிகளுக்கு செல்வதற்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு முன்னதாக தகவல் தெரிவிக்கப்படும். அஞ்சல் வாக்குகளை சேகரிக்க அதற்கென அமைக்கப்பட்ட ஒரு குழு செல்லும். இந்தக் குழுக்களுக்கு போதிய காவல் துறை பாதுகாப்பும் வழங்கப்படும். இந்தக் குழுவில் காவல் துறை அலுவலா்கள், விடியோகிராபா், அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை செய்தியாளா், வேட்பாளா் அல்லது அவரால் நியமனம் செய்யப்பட்ட முகவா்கள் ஆகியோா் இடம்பெறுவா். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தோ்தலில் தங்களது வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.