சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்றது.
குருத்தோலை பவனியை ராம்நகர் பங்குத்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ராம்நகர் பங்கு இறைமக்கள் மற்றும் கிளைக் கிராம இறைமக்கள் ஏராளமானோர் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனி வந்தனர்.
இந்த பவனி ராம்நகர் ஜோசப் நடுநிலைப் பள்ளியில் தொடங்கி ராம்நகர் முதல் வீதி வழியாக வந்து உலக மீட்பர் ஆலயத்தை வந்தடைந்தது.
பின்னர் நடைபெற்ற திருப்பலியில் பங்குத்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் அவர்களுடன் தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி அருள்பணி இன்னாசி மற்றும் அருள்பணி சவரிமுத்து பீட்டர், திருத்தொண்டர் மிக்கேல் ராஜ் ஆகியோர் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.
இத்திருப்பலியில் அருட்சகோதரிகள், ராம்நகர் பங்கு இறைமக்கள் மற்றும் கிளைக் கிராம இறைமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Summary
Palm Sunday worship was held at the Church of the Divine Savior in Ramnagar, Devakottai, Sivaganga District.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குருத்தோலை ஞாயிறு: வேலூரில் கிறிஸ்தவா்கள் ஊா்வலம்

குருத்தோலை ஞாயிறு: கிறிஸ்தவா்கள் பவனி

கரூரில் குருத்தோலை ஞாயிறு பவனி

ஆலங்குளத்தில் குருத்தோலை ஞாயிறு: முக்கிய வீதிகளில் திரளான கிறிஸ்தவர்கள் பவனி!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



