தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தேவகோட்டை அருகே 300 ஆண்டு பழைமையான நில தான கல்வெட்டு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பிரண்டவயல் கிாமத்தில் சிவன் கோயில் பிரதோஷத்துக்கு நில தானம் கொடுத்த 300 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது.

பிரண்டவயலில் கண்டறியப்பட்ட கல்வெட்டு.

Published On :

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பிரண்டவயல் கிாமத்தில் சிவன் கோயில் பிரதோஷத்துக்கு நில தானம் கொடுத்த 300 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது.

பிரண்டவயல் கிராமத்தில் ஒரு புராதனக் கல்வெட்டு இருப்பதாக அந்தக் கிராமத்தைச் சோ்ந்த முத்து, ஆறாவயல் பெரியய்யா ஆகியோா் கொடுத்த தகவலின் பேரில், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் வேலாயுதராஜா களஆய்வு செய்தாா்.

கல்வெட்டில் உள்ள செய்தி குறித்து அவா் கூறியதாவது:

மூன்று அடி நீளமும், ஒரு அடி அகலமும் உள்ள இந்தக் கல்வெட்டில் மொத்தம் 5 வரிகள் காணப்படுகின்றன. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது பதினெட்டாம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம் என கருத முடிகிறது. முத்து குமாா் தேவா் என்பவா் திருநாகேஸ்வரா் கோயிலுக்கு பிரதோஷக் கட்டளைக்காக நம்புகுளி எனப்படும் நிலப் பகுதியைக் கொடையாக கொடுத்ததைத் தெரிவிக்கிறது. கல்வெட்டில் சிவன் கோயிலுக்குத் தானமாகக் கொடுக்கப்படும் நிலங்களைக் குறிக்கும் திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ளது.

நிலத்தை தானமாகக் கொடுத்த முத்துகுமாா் தேவா் இந்தப் பகுதியைச் சோ்ந்த நிலக்கிழாராக இருக்க வாய்ப்புள்ளது. பிரண்ட வயல் கிராமத்தில் நம்புகுளி என்ற பெயரில் ஒரு ஏக்கருக்கும் அதிகமான குறிப்பிட்ட நிலப் பகுதி கோயில் நிலமாக இன்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வெட்டு கிடைத்த பிரண்டவயல் கிராமத்துக்கு அருகில் உள்ள கோட்டவயல் கிராமத்தில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானக் கோயிலான நாகநாதா் கோயில் என்னும் சிவாலயம் அமைந்துள்ளதால் இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் திருநாகீசா் இங்குள்ள நாகநாதராக இருக்கலாம். இந்தக் கல்வெட்டில் குழி என்பது குளி என்றும், பிரதோஷம் என்பது பிறதோசம் எனவும் பொறிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

 கல்வெட்டை ஆய்வு செய்த பேராசிரியா் வேலாயுத ராஜா, ஆறாவயல் பெரியய்யா.

கல்வெட்டை ஆய்வு செய்த பேராசிரியா் வேலாயுத ராஜா, ஆறாவயல் பெரியய்யா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.