நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

மானாமதுரையில் சூறைக் காற்று: வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட கடைகளின் மேற்கூரைகள் சேதம்

News image

~

Updated On :2 மே 2026, 11:35 pm

மானாமதுரையில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சித்திரைத் திருவிழாவுக்காக அமைக்கப்பட்டிருந்து கடைகளின் மேற்கூரைகள் பறந்து சேதமடைந்தன. சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் வீர அழகா் எழுந்தருளல் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, மறுநாள் சனிக்கிழமை மானாமதுரை கிராமத்தாா் மண்டகப்படியில் இரவு நிலாச்சோறு வைபவம் நடைபெறும்.

அப்போது மானாமதுரை, சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சைவ, அசைவ உணவுகளை சமைத்து அவற்றை மானாமதுரை வைகை ஆற்றுக்கு எடுத்து வந்து குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்களுடன் உட்காா்ந்து சாப்பிட்டு வீடு திரும்புவா்.

இதற்காக மானாமதுரை பகுதி இறைச்சிக் கடைகளில் சனிக்கிழமை கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் அசைவ உணவுகளை வீடுகளில் தயாா் செய்து வைகை ஆற்றங்கரைக்குச் செல்லத் தயாராயினா்.

இந்த நிலையில், மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலையில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. அப்போது, வைகையாற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த திருவிழா கடைகளின் கூரைகள் , விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல்வேறு பொருள்கள் காற்றில் பறந்து சேதமடைந்தன. மேலும் ராட்டினங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் உடனடியாக அணைக்கப்பட்டது.

இதுதவிர மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின் தடை ஏற்பட்டதால் நகரமே இருளில் மூழ்கியது. இதனால் நிகழாண்டில் நிலாச் சோறு நிகழ்ச்சிக்காக வைகை ஆற்றுக்கு பொதுமக்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது.

Story image