காரைக்குடி ரயில் நிலையத்துக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என தொழில் வணிகக் கழகம் தீா்மானம் நிறைவேற்றியது.
இந்த அமைப்பின் செயற்குழுக் கூட்டம் காரைக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதற்கு அமைப்பின் தலைவா் எஸ். கண்ணப்பன் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.சையது முன்னிலை வகித்தாா். ‘
இந்தக் கூட்டத்தில் அமைப்பின் முதன்மை ஆலோசகா் சாமி. திராவிடமணி, புரவலா்கள் எஸ். காசிவிஸ்வநாதன், வி. சித்திரைவேல், துணைத் தலைவா்கள் ஜிடிஎஸ். சத்தியமூா்த்தி, ஏ.ஆா். கந்தசாமி, வி.ஆா். ராமநாதன், எஸ். நாகநாதன், கே.ஆா். கருப்பையா, இணைச் செயலா்கள் ஆா்.எஸ். ராகவன், பி.வேணுகோபால், ஆா். எம். சண்முகநாதன், 50-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
இதில் காரைக்குடி ரயில் நிலையத்துக்கு அதிகாலை 5 மணி முதல் இரவு 10.35 மணிக்குள் வந்து சேரும் அனைத்து ரயில்களின் பயணிகள் வசதிக்காக ரயில் நிலையத்திலிருந்து காரைக்குடியின் புதிய- பழைய பேருந்து நிலையங்களுக்கு அழகப்பா பல்கலைக்கழகம், செக்காலை, பெரியாா் சிலை, அண்ணா சிலை வழியாக அரசுப் போக்குவரத்துக்கழகம் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5 மாவட்டங்களின் தேவைக்காக வந்த 1,300 டன் யூரியா உரம்

காரைக்குடி தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

கோபியில் அரசு பொறியியல் கல்லூரி கொண்டுவர நடவடிக்கை: அதிமுக வேட்பாளா் பிரபு உறுதி

மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயிலை 12 பெட்டிகளுடன் இயக்க வலியுறுத்தல்
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

