தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு நிலவியது.
தலைநகர் தில்லியில் உள்ள ரோஹிணி செக்டர் 18 மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சனிக்கிழமை மாலை மர்ம நபர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து, வெடிகுண்டை அகற்றும் குழுவினர், மத்திய பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வளாகத்தில் முழுமையான தேடுதல் நடத்தினர்.
சோதனையின் போது சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி கூறினார்.
இதையடுத்து விசாரணையில், போலி மிரட்டல் அழைப்பு விடுத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீஸ் கைது செய்தது. முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
நிலைமை உடனடியாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது, மேலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் இயல்பு நிலை செயல்பாடுகள் எந்த இடையூறும் இன்றி தொடர்ந்தன என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.
Summary
A bomb threat call at the Rohini Sector 18 metro station triggered a security scare on Saturday evening, but nothing suspicious was found during a thorough check, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ரோஹிணி மேற்கு மெட்ரோ நிலையத்தில் மின்தூக்கி அமைக்க நிலம்: ஒதுக்கீடு செய்து துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

மெட்ரோ ரயிலில் தலைமைச் செயலகத்துக்கு சென்ற தில்லி முதல்வர்!

சென்னை மெட்ரோவுக்கு உலகளாவிய விருது!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy




