சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 'GEEF உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு விருதுகள் 2026' நிகழ்வில், 2026 ஆம் ஆண்டின் சிறந்த உலகளாவிய சுற்றுச்சூழல் தலைமைத்துவமிக்க திட்டம் என்ற விருதினை வென்றுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு
GEEF உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு விருதுகள் 2026-இல் (GEEF Global Environmental Excellence Awards 2026), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் “போக்குவரத்துத் துறை – மெட்ரோ ரயில் பிரிவில்”, “2026 ஆம் ஆண்டின் சிறந்த உலகளாவிய சுற்றுச்சூழல் தலைமைத்துவமிக்க திட்டம்” (Global Environmental Leadership Project of the Year 2026) என்ற விருதை பெற்றுள்ளது.
இந்த விருது வழங்கும் விழா, வரும் மே 22 அன்று புதுதில்லியில் நடைபெற உள்ள உலகளாவிய எரிசக்தித் தலைவர்கள் உச்சி மாநாட்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் திட்டமிடல், கட்டுமானம் மற்றும் இயக்கம் ஆகிய அனைத்து நிலைகளிலும் சுற்றுச்சூழல் சார்ந்த அம்சங்களை ஒருங்கிணைப்பதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முன்னணியான பங்களிப்பை இந்த விருது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சுற்றுச்சூழல் செழுமை மிக்க பகுதிகளைப் பாதுகாப்பதற்காக வழித்தடங்களில் மாற்றங்களைச் செய்ததில் தொடங்கி, நிலையங்கள் மற்றும் உயர்மட்ட கட்டுமானங்களில் பசுமை வடிவமைப்பு அம்சங்களை இணைப்பது வரை, ஒரு பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டம் எவ்வாறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மீளுருவாக்கம் மற்றும் ஈடுசெய்யும் மரக்கன்றுகள் (Compensatory Plantations) மூலம் மிக விரைவான மர அடர்த்தி மீட்சியை மேம்படுத்த முடியும் என்பதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நிரூபித்துள்ளது.
இந்த உலகளாவிய அங்கீகாரம், நிலையான போக்குவரத்து சேவையை வழங்குவதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும், பசுமையான மற்றும் வலிமையான சென்னையை உருவாக்குவதற்கான அதன் தொலைநோக்குப் பார்வையையும் மேலும் உறுதிப்படுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
Chennai Metro Rail Limited has won the award for the 'Best Global Environmental Leadership Project of 2026' at the 'GEEF Global Environmental Excellence Awards 2026' event.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’
சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்!
வீடியோக்கள்

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு



