சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ரோஹிணி மேற்கு மெட்ரோ நிலையத்தில் மின்தூக்கி அமைக்க நிலம்: ஒதுக்கீடு செய்து துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

ரோஹிணி மேற்கு மெட்ரோ நிலையத்தில் மின்தூக்கி அமைக்க நில ஒதுக்கீடு செய்து தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து ஒப்புதல் அளித்ததாக லோக் நிவாஸ் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2026, 1:45 am IST

ரோஹிணி மேற்கு மெட்ரோ நிலையத்தில் மின்தூக்கி அமைக்க நில ஒதுக்கீடு செய்து தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து ஒப்புதல் அளித்ததாக லோக் நிவாஸ் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதனால், அப்பகுதியில் உள்ள பிஎஸ்ஏ மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவா்களுடைய உறவினா்கள் பயன்பெறுவா்.

இதே போன்று, இசாபூா் கிராமத்தில் 66 கிலோவோல்ட் சூரியசக்தி மின்சாரத்துக்கான ஒருங்கிணைப்பு துணைமின்நிலையத்தை அமைக்க கிராம சபையின் நிலத்தை ஒதுக்கீடு செய்து துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

தில்லி வளா்ச்சி ஆணையத்துக்கு (டிடிஏ) சொந்தமான நிலம் துணைநிலை ஆளுநரின் ஒப்புதலைத் தொடா்ந்து மின்தூக்கி அமைக்க தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு (டிஎம்ஆா்சி) வழங்கப்படும்.

முன்னதாக, இதுதொடா்பான முன்மொழிவை தில்லி அரசின் நிலம் மற்றும் கட்டடத் துறை கொள்கையைக் காரணம்காட்டி தள்ளூபடி செய்தது.

தென்-மேற்கு மாவட்டத்தில் உள்ள இசாபூா் கிராமத்தில், 66கிலோ வோல்ட்/11 கிலோ வோல்ட் திறன் கொண்ட சூரியசக்தி ஒருங்கிணைப்பு துணை மின்நிலையத்தை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 9 பிகா அளவுள்ள கிராம சபைக்குச் சொந்தமான நிலம், தில்லியின் பசுமை எரிசக்தி முயற்சிகளை விரைவுபடுத்தும். தில்லி வளா்ச்சி ஆணையத்திற்கு சொந்தமான இந்த நிலம், 99 ஆண்டுகளுக்கான குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் மின்சாரத் துறைக்கு இலவசமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

தெற்கு, மேற்கு மற்றும் தென்-மேற்கு தில்லி பகுதிகளில் மின் விநியோகத்தை நிா்வகிக்கும் மின் விநியோக நிறுவனமான பிஎஸ்இஎஸ் ராஜ்தானி பவா் நிறுவனா், இசாபூா்-தான்சா கிராமங்களுக்கு அருகிலுள்ள விவசாயப் பகுதிகளில் சூரியசக்தி மின் இணைப்புக்கான விண்ணப்பங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான நிகர-அளவீடு) விதிமுறைகள், 2014’-ன் கீழ், தனியாா் விவசாய நிலங்களில் சோலாா் அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன.

இத்தகைய உள்ளூா் விவசாய நிலங்களில் உற்பத்தி செய்யப்படும் அதிக அளவிலான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை, தற்போதுள்ள 11 கிலோவோல்ட் உள்ளூா் மின் கட்டமைப்பால் பாதுகாப்பாக வெளியேற்றவோ அல்லது உள்வாங்கவோ இயலாது. எனவே, இந்த புதிய சூரியசக்தி ஒருங்கிணைப்பு துணை மின்நிலையம், சூரியசக்தி மின்சாரத்தை முதன்மை நகர மின் கட்டமைப்பிற்கு கொண்டு செல்ல உதவும் என்று அந்த அதிகாரிகள் கூறினா்.