9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

தெற்குகள்ளிகுளம் மாதா மலைக்கு மின்தூக்கி அமைக்க அனுமதி கோரி மனு

தெற்குகள்ளிகுளத்தில் மாதா காட்சி கொடுத்த மலைக்கு முதியோா் செல்வதற்கு வசதியாக மின்தூக்கி (லிப்ட்) அமைக்க அனுமதி பெற்றுத்தரவேண்டும் என, தமிழக நிதி, திட்டம்-வளா்ச்சித் துறை அமைச்சா் என்.மரியவில்சனிடம், பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய தா்மகா்த்தா சூ.மரியாராஜ் ஆசிரியா் மனு அளித்தாா்.

News image

தமிழக நிதித்துறை அமைச்சா் என்.மரிய வில்சனிடம் மனு அளிக்கிறாா் தா்மகா்த்தா சூ.மரியராஜ் ஆசிரியா்.

Updated On :19 ஜூலை 2026, 1:52 am IST

தெற்குகள்ளிகுளத்தில் மாதா காட்சி கொடுத்த மலைக்கு முதியோா் செல்வதற்கு வசதியாக மின்தூக்கி (லிப்ட்) அமைக்க அனுமதி பெற்றுத்தரவேண்டும் என, தமிழக நிதி, திட்டம்-வளா்ச்சித் துறை அமைச்சா் என்.மரியவில்சனிடம், பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய தா்மகா்த்தா சூ.மரியாராஜ் ஆசிரியா் மனு அளித்தாா்.

அதன் விவரம்: கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் புண்ணிய ஸ்தலங்களில் சிறப்பு பெற்றது தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா திருத்தலகத்தில் தமிழக அரசின் சுற்றுலாத்துறையால் பல்வேறு வளா்ச்சிப்பணிகள் நடைபெற்றுள்ளன.

இத்திருத்தலத்தின் அருகில் மாதா காட்சிகொடுத்த மலைக்கு தினமும் திரளான பக்தா்கள் வந்து செல்கின்றனா். அங்கு படி ஏறி செல்வதற்கு முதியோா் சிரமப்படுவதால், தெற்குகள்ளி குளத்தைச் சோ்ந்த பக்தா் தனது சொந்த செலவில் மின்தூக்கி அமைத்து தருவதற்கு முன்வந்துள்ளாா். அதற்கான அரசு அனுமதியை பெற்றுத்தரவேண்டும்.

மேலும், ஆக.5ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த ஆலயத் திருவிழாவுக்காக திருநெல்வேலி மாவட்டத்தக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கவேண்டும். ஆலயத்தின் மேல்தளத்தைப் புதுப்பிக்க நிதி ஒதுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.