லக்னௌவிலிருந்து தில்லி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பபடுத்தியது.
உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவிலிருந்து 180 பயணிகளுடன் தலைநகர் தில்லிக்கு வெள்ளிக்கிழமை காலை 10.45 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்படத் தயாராகவிருந்தது.
அப்போது விமானத்தில் வெடிகுண்டு இருக்கக்கூடும் என்ற தகவல் விமான ஊழியர்களுக்குக் கிடைத்ததாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, விமானம் ஓடுதளப் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்புப் படையினர் விமானம் மற்றும் பிற பகுதிகளில் சோதனையிடத் தொடங்கினர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
விமானத்தின் கழிப்பறையில் வெடிகுண்டு என்று எழுதப்பட்ட டிஷ்யூ பேப்பர் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும், அதனால் பீதி ஏற்பட்டதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.
Summary
A Lucknow-Delhi flight was delayed on Friday after a hoax bomb threat was received shortly before it was to take off from the airport here, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் அமைச்சரின் மகனுக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

பிரதமரின் பெங்களூரு பயணத்தின்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy




