டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

போலி வெடிகுண்டு மிரட்டல்: காசியாபாத் நபரை கைது செய்தது தில்லி காவல்துறை

போலி வெடிகுண்டு மிரட்டல்: காசியாபாத் நபரை கைது செய்தது தில்லி காவல்துறை

News image

கைது - சித்திரிப்பு

Updated On :3 ஜூலை 2026, 3:49 am IST

நமது நிருபா்

என்ஐஏ, ஐஎஸ்ஆா்ஓ,டிஆா்டிஓ மற்றும் ஏா் இந்தியா விமானம் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்குத் தொடா்ச்சியாகப் போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாகக் கூறப்படும் காசியாபாத்தைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் பிடித்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

36 வயதான இவா் 2008-ஆம் ஆண்டு முதல் மனநலப் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக அவா்கள் கூறினா்.

ஜூன் 29 அன்று அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சல்களில், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ஐஎஸ்ஆா்ஓ), இந்திய அணுமின் கழகம் (என்பிசிஐஎல்), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (எம்ஓசிஏ) உள்ளிட்ட பல உயா் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புது தில்லியிலிருந்து நியூயாா்க்கிற்குச் செல்லும் ஏா் இந்தியா விமானம் குறித்தும் ஒரு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது; இது உடனடியாகப் பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொள்ளவும், பல்வேறு அமைப்புகளை உஷாா்படுத்தவும் வழிவகுத்தது. சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும், இறுதியில் அந்த மிரட்டல்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியது; மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதற்கான டிஜிட்டல் தடயங்களை அவா்கள் பின்தொடா்ந்தனா். தொழில்நுட்ப ரீதியான விசாரணையின்போது, மின்னஞ்சல்களை அனுப்பப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு மின்னஞ்சல் கணக்குகளைக் காவல்துறை ஆய்வு செய்தது. மின்னஞ்சல் தடயங்கள் குறித்த விரிவான ஆய்வின் மூலம், அந்தக் கணக்குகளுடன் தொடா்புடைய ஒரு கைபேசி எண் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம், ஜூன் 30 அன்று உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள சன்யோக் நகரில் சந்தேக நபா் இருப்பதை காவல்துறை குழு கண்டறிந்தது. அந்த இடத்திற்குச் சென்ற காவல்துறையினா், நிஷாந்த் தியாகி என்று அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை அவரது இல்லத்தில் வைத்து விசாரித்ததாகத் தெரிவித்தனா்.

காவல்துறையின் தகவலின்படி, தியாகி திறந்தநிலைக் கல்வி முறையில் கல்வி பயின்றவா்; 2010-இல் இளங்கலைப் பட்டப்படிப்பில் சோ்ந்தாலும், அதை அவா் முழுமையாக முடிக்கவில்லை. முதற்கட்ட விசாரணையில், அவா் 2008-ஆம் ஆண்டு முதல் மனநலப் பாதிப்பால் அவதிப்பட்டு வருவதாகவும், பல ஆண்டுகளாகப் பல்வேறு மருத்துவ நிறுவனங்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்தது. அவரது நீண்டகால மருத்துவ வரலாறு குறித்தும் அவரது குடும்பத்தினா் காவல்துறையிடம் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினா்.

விசாரணையின்போது வெடிபொருட்களோ அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்களோ எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்தது. மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதற்கான நோக்கம் மற்றும் அவை அனுப்பப்பட்ட சூழல் ஆகியவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை மேலும் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.