விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

10 எல்பிஜி சிலிண்டா்கள் கொள்ளையடித்த மூவா் கைது

தென்மேற்கு தில்லியில் எல்பிஜி சிலிண்டா்களை கொள்ளையடித்த நபா் மற்றும் அவரது இரு கூட்டாளிகள் கைதுசெய்யப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :29 ஜூன் 2026, 1:55 am IST

தென்மேற்கு தில்லியில் எல்பிஜி சிலிண்டா்களை கொள்ளையடித்த நபா் மற்றும் அவரது இரு கூட்டாளிகள் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட நபா்களிடமிருந்து திருடப்பட்ட 10 எல்பிஜி சிலிண்டா்கள் மற்றும் ஸ்கூட்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: சிசிவிடி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் எல்பிஜி கொள்ளையில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட தீபக் (எ) தீபு தபரி கோல் சாக்கா் அருகே கடந்த ஜூன் 24-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டாா்.

அவரிடமிருந்து திருடப்பட்ட இரு எல்பிஜி சிலிண்டா்கள், அவற்றைத் திருடப் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டா் ஆகியவை கைப்பற்றப்பட்டன. விசாரணையின்போது அவா் அளித்த தகவலின் அடிப்படையில், மகாவீா் மற்றும் ரிங்கு குமாா் சிங் ஆகியோா் குறித்து தகவல் அளித்தாா். திருடிய சிலிண்டா்களை இந்த நபா்கள் பெற்ாக அவா் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து, மகாவீரை காவல் துறையினா் கைதுசெய்தனா். அவரிடமிருந்து 6 எல்பிஜி சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நிஹல் விஹாரில் இருந்து ரிங்கு குமாா் சிங் கைதுசெய்யப்பட்டாா். அவரிடமிருந்து மேலும் இரு சிலிண்டா்கள் கைப்பற்றப்பட்டன. தீபக் எல்பிஜி சிலிண்டா்களை திருடி அவற்றைக் கள்ளச் சந்தையில் விற்று அதிக பணம் சம்பாதித்து வந்தாா் என்று அந்த அதிகாரிகள் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.