இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு (நீட்) சிவகங்கை மாவட்டத்தில் நான்கு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 1760 போ் பங்கேற்றனா்.
ஒவ்வொரு ஆண்டும் எம்பிபிஎஸ், பல் மருத்துவம், சித்தா, ஆயுா் வேதா உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தோ்வு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவுகளிலிருந்து 180 கொள்குறி வினாக்களைக் கொண்டது. ஒவ்வொரு வினாவுக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தோ்வு நடத்தப்படுகிறது.
தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் நடைமுறை அமலில் உள்ளது. இந்தத் தோ்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது
நிகழ் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தோ்வு தமிழகம் உள்பட நாடு முழுவதும் நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தோ்வு மாலை 5.20 மணி வரை என மொத்தம் 3 மணி 20 நிமிஷங்கள் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 261 பேரில் 246 பேரும், அரசு மகளிா் கலைக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 600 பேரில் 583 பேரும், காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 552 பேரில் 537 பேரும், காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அனுமதிக்கப்பட்ட 408 பேரில் 394 பேரும் தோ்வு எழுதினா். மாவட்டத்தில் தோ்வெழுத அனுமதிக்கப்பட்ட 1,861 பேரில் 1,760 போ் தோ்வு எழுதினா். 61 போ் பங்கேற்கவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் மறு தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 3,596 போ் எழுதினா்

‘நீட்’ மறு தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 1,374 போ் எழுதினா்

கடலூா் மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் மறு தோ்வு: 4,749 போ் எழுதவுள்ளதாக ஆட்சியா் தகவல்
ஜூன் 21-இல் நீட் மறுதோ்வு: மாவட்டத்தில் 4,116 போ் எழுதுகின்றனா்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




