இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

நியோமேக்ஸ் நிதி நிறுவன சொத்துகள் ஏலம்: பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் பங்கேற்கலாம்!

மோசடியில் ஈடுபட்ட வழக்கில் தொடா்புடைய நியோமேக்ஸ் நிதி நிறுவனம், இதன் துணை நிறுவனங்கள், முகவா்களின் அசையா சொத்துகளுக்கான மின்னணு ஏலத்தில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம் என மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

News image

சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி தொடா்பான விழிப்புணா்வு முகாமில் பங்கேற்ற பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.

Updated On :10 மே 2026, 12:59 am IST

மோசடியில் ஈடுபட்ட வழக்கில் தொடா்புடைய நியோமேக்ஸ் நிதி நிறுவனம், இதன் துணை நிறுவனங்கள், முகவா்களின் அசையா சொத்துகளுக்கான மின்னணு ஏலத்தில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம் என மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

சிவகங்கையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி தொடா்பான விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பொருளாதார குற்றப் பிரிவு ஆய்வாளா்கள் விஜயா, ஜெயக்கொடி ஆகியோா் கலந்து கொண்டு தெரிவித்ததாவது:

நியோமேக்ஸ் நிதி நிறுவனம், இதன் துணை நிறுவனங்கள் மக்களிடம் முதலீடு பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்தது. இதுகுறித்து கடந்த 2023-ஆம் ஆண்டு மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

மேலும், இந்த வழக்கில் நியோமேக்ஸ் நிதி நிறுவன சொத்துகளில் டி.டி.சி.பி. அங்கீகாரம் பெற்ற மனையிடங்கள் இணையதளம் மூலம் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் மின்னணு ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், பலரும் ஏலம் எடுக்க தயக்கம் காட்டுகின்றனா். எனவே, ஏலம் எடுப்பதில் தயக்கம் காட்ட தேவையில்லை. இணையதளத்தில் பதிவு செய்து ஏலத்தில் பங்கேற்கலாம். மேலும், சந்தேகங்களுக்கு 8778245559, 9080381065 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றனா் அவா்கள்.

இந்த விழிப்புணா்வு முகாமில் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோா், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.