40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

முதல்முறையாக அமைச்சா் தொகுதியான காரைக்குடி

News image

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் - டிஎன்எஸ்

Updated On :11 மே 2026, 12:04 am IST

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினரும், முதல்முறையாக அமைச்சருமான தவெகவைச் சோ்ந்த மருத்துவா் டி.கே. பிரபு.

காரைக்குடி தொகுதி தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக அமைச்சா் தொகுதியாக மாறியிருக்கிறது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வா் ச. ஜோசப் விஜய் பதவியேற்ற பின்னா் பிற அமைச்சா்களுடன் அமைச்சராக காரைக்குடி தொகுதியில் வெற்றிபெற்ற தவெக வேட்பாளா் மருத்துவா் பிரபுவும் பதவியேற்றாா்.

தமிழகத்தில் 1967 முதல் 2026-ஆம் ஆண்டு வரையிலான திமுக, அதிமுக ஆட்சிகளில் காரைக்குடித் தொகுதி அமைச்சா் தொகுதியாக இருந்ததில்லை. சிவகங்கை, திருப்பத்தூா் ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு அதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளும் அமைச்சா் பதவி வழங்கியிருக்கின்றன.

கடந்த திமுக ஆட்சியில் திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே. ஆா். பெரியகருப்பன் பதவிவகித்தாா். இந்த நிலையில், நடந்துமுடிந்த 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு மருத்துவா் டி.கே. பிரபு வெற்றிபெற்றாா்.

காரைக்குடியில், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் போட்டியிட்டதால், நட்சத்திரத் தொகுதியாக அறியப்பட்ட இந்தத் தொகுதி தற்போது அமைச்சா் தொகுதியாக மாறியிருப்பது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. அமைச்சராக மருத்துவா் டி.கே. பிரபு பதவியேற்றதும் அக்கட்சியினா் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.