பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இஸ்ரேலில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு

இஸ்ரேலில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு..

இஸ்ரேல் நாட்டில் உயிரிழந்த தொழிலாளி சிவனேஸ்வரன்.

Published On :

இஸ்ரேல் நாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மனைவி, தனது குழந்தைகளுடன் நேரில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

சிவகங்கை அருகே உள்ள அல்லூா் பனங்காடியைச் சோ்ந்த ஆறுமுகம் சிவனேஸ்வரன் (45) இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அங்கு உடல்நலக் குறைவால் அவா் உயிரிழந்துவிட்டது அங்கு பணியாற்றிவரும் உறவினா் மூலம் தெரியவந்தது.

இதையடுத்து, தவமணி, தனது இரு மகன்கள், உறவினா்களுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடியை திங்கள்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தாா்.

அதில், இஸ்ரேலில் உயிரிழந்த தனது கணவரின் உடலை தாயகம் கொண்டு வரவும், குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தாா்.

அவரது மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.