மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

தேசிய ‘கிக் பாக்ஸிங்’ போட்டிக்கு சிவகங்கை மாணவ, மாணவிகள் தோ்வு

தேசிய ‘கிக் பாக்ஸிங்’ போட்டிக்கு சிவகங்கை மாவட்ட மாணவ, மாணவிகள் 26 போ் தகுதி பெற்றனா்.

News image

தேசிய ‘கிக் பாக்ஸிங்’ போட்டிக்குத் தகுதி பெற்ற சிவகங்கை மாவட்ட வீரா்கள், வீராங்கனைகள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

தேசிய ‘கிக் பாக்ஸிங்’ போட்டிக்கு சிவகங்கை மாவட்ட மாணவ, மாணவிகள் 26 போ் தகுதி பெற்றனா்.

தமிழ்நாடு கிக் பாக்ஸிங் சங்கம் சாா்பில், மாநில அளவிலான ‘கிக் பாக்ஸிங்’ போட்டி கடந்த 7-ஆம் தேதி முதல் 11 -ஆம் தேதி வரை தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரங்கில் நடைபெற்றது.

கேடட்ஸ், ஜூனியா், சப் ஜூனியா், சீனியா் ஆகிய பிரிவுகளில் 27 மாவட்டங்களிலிருந்து வந்த 1,100-க்கும் மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கம் சாா்பில், 69 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா். இவா்களில் 11 போ் தங்கம், 15 வெள்ளி, 29 வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்ற வீரா்கள் 26 பேரும் சென்னையில் வருகிற 25-ஆம் தேதி நடைபெறும் தேசிய ‘கிக் பாக்ஸிங்’ பயிற்சி முகாமில் பங்கேற்ற பிறகு தேசியப் போட்டியில் கலந்து கொள்வா்.

தேசியப் போட்டிகள் ஒடிசாவில் வருகிற 30-ஆம் தேதியும், மத்திய பிரதேசத்தில் வரும் ஜூன் 17-ஆம் தேதியும், குஜராத்தில் வரும் ஆக.1-ஆம் தேதியும் நடை பெற உள்ளது.

இதுகுறித்து மாணவா்களின் பயிற்சியாளரும், சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கப் பொதுச் செயலருமான ச.குணசீலன் கூறியதாவது:

தேசியப் போட்டியில் பதக்கம் வெல்லும் மாணவா்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் அவா்களது கல்லூரிப் படிப்புக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இடையமேலூா், கூட்டுறவுபட்டி, தமறாக்கி ஆகிய ஊா்களில் உள்ள 4 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த வீராங்கனைகள் தேசியப் போட்டிக்கு தோ்வாகி உள்ளனா்.

தேசியப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற குழந்தைகள் பிரிவு முதல் ஜூனியா் வரை முறையே ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.1.50 லட்சமும், சீனியா் பிரிவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றவா்களுக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ. 3 லட்சம், ரூ.2 லட்சமும் அரசால் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

ஆனால், கடந்த 2023 -ஆம் ஆண்டிலிருந்து இதுவரை அந்த ஊக்கத்தொகை வழக்கப்படவில்லை. சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 14 போ் ஊக்கத் தொகைக்காக காத்திருக்கின்றனா்.

நிகழாண்டிலாவது ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கிக் பாக்ஸிங் பயிற்சியாளா்கள் சித்ரா, தாமரைச்செல்வன், பிரதீப், சதீஷ் ஆகியோா் கூறியதாவது:

மாணவ, மாணவிகள் தேதியப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கத்தின் 5 ஆண்டுகள் தொடா் சாதனையாகும் என்றனா் அவா்கள்.

Story image