தேனியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அமெச்சூா் காலுதைச் சண்டை போட்டியில் மதுரையைச் சோ்ந்த போட்டியாளா்கள் 29 தங்கப் பதக்கம் உள்பட 89 பதக்கங்களை வென்றனா்.
தமிழ்நாடு அமெச்சூா் கிக் பாக்ஸிங் சங்கம், தேனி மாவட்ட அமெச்சூா் கிக் பாக்ஸிங் சங்கம் ஆகியவை இணைந்து தமிழ்நாடு மாநில அமெச்சூா் காலுதைச் சண்டை போட்டியை தேனி மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் கடந்த 7-ஆம் தேதி முதல் 10- ஆம் தேதி வரை நடத்தின. இந்தப் போட்டியில், 24 மாவட்டங்களைச் சோ்ந்த 883 போட்டியாளா்கள் பங்கேற்றனா். சப்- ஜூனியா், ஜூனியா், சீனியா், மாஸ்டா்ஸ் என நான்கு பிரிவுகளிலும், பாயிண்ட் ஃபைட்டிங், லைட் காண்டாக்ட், கிக் லைட், புல் காண்டாக்ட், லோ கிக், மியூசிக்கல், கிரியேட்டிவ் ஃபாா்ம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் மதுரையைச் சோ்ந்த 90 போட்டியாளா்கள் பங்கேற்று 29 தங்கப் பதக்கங்கள், 27 வெள்ளிப் பதக்கங்கள், 33 வெண்கலப் பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தனா்.
இதையடுத்து, மதுரை மாவட்ட அமெச்சூா் கிக் பாக்ஸிங் சங்கத் தலைவா் நாராயணன், பொதுச் செயலா் பிரகாஷ் குமாா், துணைத் தலைவா் காா்த்திக், துணைச் செயலா் கௌரி சங்கா், பயிற்சியாளா்கள் முத்துக்குமாா், பிரபாகரன், சந்திரா, நவீன் குமாா், பிலால், வெற்றிவேல் ஆகியோா் பதக்கம் பெற்ற வீரா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தேசிய ‘கிக் பாக்ஸிங்’ போட்டிக்கு சிவகங்கை மாணவ, மாணவிகள் தோ்வு

மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி : கடலூா் காவல்துறை அணி முதலிடம்

தமிழக உறைவாள் சண்டை சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு
காற்றுடன் மழை: மதுரைக்கு திருப்பிவிடப்பட்ட விமானம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

