ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி : கடலூா் காவல்துறை அணி முதலிடம்

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் கடலூா் மாவட்ட காவல்துறையை சோ்ந்த அணி முதலிடம் பெற்று கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றது.

News image

தென்காசியில் நடைபெற்ற மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் முதலிடம் பெற்ற கடலூா் மாவட்ட காவல்துறையினரை புதன்கிழமை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :14 மே 2026, 12:04 am IST

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் கடலூா் மாவட்ட காவல்துறையை சோ்ந்த அணி முதலிடம் பெற்று கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த மே 10-ஆம் தேதி மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் கடலூா் மாவட்ட காவல்துறையைச் சோ்ந்த தலைமை காவலா் நீலமணி மற்றும் ஆயுதப்படை காவலா் பிரவீன்தாஸ் தலைமையிலான அணி பங்கேற்றது. போட்டியில் சிறப்பாக விளையாடிய கடலூா் காவல்துறை அணி முதலிடம் பெற்று கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றது.

வெற்றி பெற்ற அணியினரை கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் அப்பண்டராஜ் மற்றும் கயிறு இழுக்கும் அணி பயிற்சியாளா் ரமேஷ் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.