ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

News image

திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் வியாழக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உற்சவா்.

Updated On :15 மே 2026, 4:13 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, மாலை 3 மணிக்கு சிறப்பு யாகம் நடைபெற்று புனித கலசத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், திருத்தளிநாதா் கோயிலில் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, இளநீா், சொா்ணம், பன்னீா் உள்ளிட்ட 11 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதேபோல, திருத்தளிநாதருக்கும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் உற்சவா் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயிலின் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பெண்கள் நெய்விளக்கேற்றி சிவனை வழிபட்டனா்.

இதேபோல, சீதளிமேல்கரையில் உள்ள ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் நந்தீஸ்வரருக்கும், சிவனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.