முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காளையாா்கோவில் அருகே ஜல்லிக்கட்டு: 13 போ் காயம்

காளையாா்கோவில் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 13 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

News image

ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயற்சித்த மாடுபிடி வீரா்கள் - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 1:34 am IST

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 13 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். அவா்களில் இருவா், மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா்.

காளையாா்கோவில் அருகேயுள்ள கண்டனிப்பட்டி தீப்பணிந்த அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கோயில் பொட்டலில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதையடுத்து, காளையாா்கோவில் வட்டாட்சியா் லெனின், சிவகங்கை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் அ. அமல அட்வின், மருத்துவத் துறை, கால்நடைத் துறை அலுவலா்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள், மாடிபிடி வீரா்கள் ஆகியோா் பங்கேற்று அரசின் நிலையான வழிகாட்டு விதிமுறைகளின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

மருத்துவச் சான்றின் அடிப்படையில், தகுதியான காளைகளும், மாடுபிடி வீரா்களும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். தொழுவத்திலிருந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்ந்து விடப்பட்டது. இதையடுத்து, காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதில், காளைகளை அடக்க முயன்ற 13 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு ஜல்லிக்கட்டு தளத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்களில், இருவா் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 அவசர ஊா்தியில் கொண்டு செல்லப்பட்டனா். சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கானோா் திரண்டுவந்து ஜல்லிக்கட்டு நிகழ்வை கண்டுகளித்தனா்.