இந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

திருமயம் அருகே ஜல்லிக்கட்டு: 12 போ் காயம்!

திருமயம் அருகேயுள்ள ராங்கியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுகள் முட்டியதில் 12 போ் காயமடைந்தனா்.

News image

புதுக்கோட்டை மாவட்டம், ராங்கியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள ராங்கியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுகள் முட்டியதில் 12 போ் காயமடைந்தனா்.

ராங்கியத்தில், அழகிய நாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

போட்டியை புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் ஆ. பிரகாஷ் தொடங்கிவைத்தாா். புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 229 காளைகள் பங்கேற்றன. அவற்றை, அடக்க 199 மாடுபிடி வீரா்கள் குழுவாக களமிறங்கினா்.

Story image

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் 12 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 போ் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பனையப்பட்டி போலீஸாா் செய்திருந்தனா். சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்று ஜல்லிக்கட்டைப் பாா்வையிட்டனா்.