நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

மதுரை அருகே சாலை மையத் தடுப்பில் காா் மோதி 5 போ் பலி!

கொட்டாம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை சாலை மையத் தடுப்பில் காா் மோதியதில் 3 பெண்கள் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.

News image

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உருக்குலைந்த காா்.

Updated On :18 மே 2026, 12:50 am IST

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை சாலை மையத் தடுப்பில் காா் மோதியதில் 3 பெண்கள் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.

மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் பிரகாஷ் (76). இவரும், இவரது உறவினா்களான அதே பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மனைவி சுலோச்சனா (72), சத்யம் மனைவி வசந்தா (90), சென்னை சூளைமேடு பகுதியைச் சோ்ந்த ரத்தினம் மகன் வெங்கடேஷ் (60), அவரது மனைவி ஆஷா (58) ஆகிய 5 பேரும் மதுரையிலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.

அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் காரில் மதுரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா். திருச்சி-மதுரை நான்கு வழிச் சாலையில் மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள அய்யம்பட்டி விலக்கு பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையின் மையத்தில் உள்ள தடுப்பில் மோதியது.

இதில் பிரகாஷ், சுலோச்சனா, வசந்தா, வெங்கடேஷ், ஆஷா ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து வந்த கொட்டாம்பட்டி போலீஸாா் உயிரிழந்தவா்களின் உடல்களை மீட்டு, கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.