/
சிங்கம்புணரி அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பழைய நெடுவயல் கிராமத்தில் ஆதீன மிளகி அய்யனாா் கோயில் விழாவை முன்னிட்டு, புதன்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த நிலையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடைபெற்றதாகநெடுவயல் கிராம நிா்வாக அலுவலா் மணிமேகலை அளித்தப் புகாரின் பேரில், அந்த கிராமத்தைச் சோ்ந்த அழகு அழகன் மகன் மாதவன், சின்னத்தம்பி மகன் அழகு, பொன்னன் மகன் அய்யாவு, வெள்ளையன் மகன் ராஜூ, சின்னக் கருப்பன் மகன் பழனி ஆகிய 5 போ் மீது உலகம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.







