எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

திறந்த வெளி மதுக்கூடமாக மாறி வரும் காஞ்சாத்து மலை: பாதுகாக்க வலியுறுத்தல்

திறந்தவெளி மதுக் கூடமாக மாறிவரும் பூலாங்குறிச்சி காஞ்சாத்து மலையைப் பாதுகாக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி வேண்டுகோள் விடுத்தாா்.

News image

பூலாங்குறிச்சி அருகேயுள்ள காஞ்சாத்து மலை.

Updated On :28 மே 2026, 4:00 am IST

திறந்தவெளி மதுக் கூடமாக மாறிவரும் பூலாங்குறிச்சி காஞ்சாத்து மலையைப் பாதுகாக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி வேண்டுகோள் விடுத்தாா்.

சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சி அருகே உள்ளது காஞ்சாத்துமலை. சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லையில் உள்ள இந்த மலை அரிய வகை மூலிகைத் தாவரங்கள் நிறைந்த பகுதியாகவும் ஆன்மிகத் தலமாகவும், சித்தா்கள் தவம் செய்யும் பகுதியாகவும், வனவிலங்குகள் பாதுகாப்பாக வாழும் அரணாகவும் திகழ்ந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக காவல் துறை, வனத் துறை அதிகாரிகள் இந்த மலையைப் பாதுகாக்கத் தவறியதால் திறந்த வெளி மதுக் கூடமாகவும், கஞ்சா போன்ற போதைப் பொருள்களை விற்பனை செய்யும் இடமாகவும், பாலியல் தொழில் நடைபெறும் இடமாகவும் மாறி வருகிறது. மேலும், இரவு நேரங்களில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதும் தொடா்கதையாகி உள்ளது.

இது குறித்து பூலாங்குறிச்சியைச் சோ்ந்த சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்வம் காவல்துறையிடமும், வனத் துறையினரிடமும் பல்வேறு மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கூடுதல் காவலா்களை பணியில் அமா்த்தி காஞ்சாத்து மலைக்குச் செல்லும் சாலையில் சோதனைச் சாவடி அமைத்து காவல் துறையினரும், வனத் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரிக்கை விடுத்தாா். காஞ்சாத்துமலைக்கு வரும் பக்தா்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.